55 தீப்பெட்டி பண்டல்கள் பறிமுதல்
55 தீப்பெட்டி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தோ்தல் பறக்கும் படை தனி தாசில்தார் ரங்கசாமி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்அமுதா ஆகியோா் மம்சாபுரம் - ஸ்ரீவில்லி புத்தூா் சாலை தனியாா் பள்ளி அருகே வாகனச் சோத னையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் மம்சாபுரத்திற்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக உரிய மேல் நட வடிக்கைகள் மேற்கொள்வதற்காக, திருநெல்வேலி விற்பனை வரி அலுவலருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்திய பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் வாகனம் மற்றும் தீப்பெட்டி பண்டல்களை உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.