நாமக்கல்லில் 2-ம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு-தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடந்தது

நாமக்கல்லில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்களை கணிணி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடந்தது.

Update: 2022-02-08 17:28 GMT
நாமக்கல்:
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி 2-ம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணிணி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். 
மாவட்ட தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கூடுதலாக இருப்பு
அதன்படி நாமக்கல் நகராட்சியில் 109 வாக்குச்சாவடிகளுக்கு 105 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் கூடுதலாக 21 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் இருப்பில் வைக்கப்பட்டன. குமாரபாளையம் நகராட்சியில் 73 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 73 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தவிற கூடுதலாக 15 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும், பள்ளிப்பாளையம் நகராட்சியில் 44 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 44 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தவிற கூடுதலாக 9 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
ராசிபுரம் நகராட்சியில் 51 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 51 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தவிற கூடுதலாக 11 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும், திருச்செங்கோடு நகராட்சியில் 88 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 88 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் தவிற கூடுதலாக 18 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும் இருப்பில் வைக்கப்பட்டன.
பேரூராட்சிகள்
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளில் உள்ள 324 வாக்குச்சாவடிகளுக்கு 318 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும், கூடுதலாக 68 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கோவேந்தன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்