நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள்.
நாமக்கல்:
2 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 530 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த காந்திநகர் பகுதியை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராசிபுரத்தை சேர்ந்த 77 வயது முதியவர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 67 ஆயிரத்து 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 79 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரைமாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 199 ஆக அதிகரித்து உள்ளது.
2,406 பேருக்கு சிகிச்சை
நேற்று 585 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 64 ஆயிரத்து 261 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 2 ஆயிரத்து 406 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.