ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-02-08 17:27 GMT
ராமநாதபுரம்,

தமிழக அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும், பயோமெட்ரிக் முறையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொது வினியோகத்திட்டத்திற்கென தனிதுறை உருவாக்க வேண்டும், உணவு பொருட்கள் அனைத்தையும் சரியான அளவில் பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் கோவிந்தன், ஜெகநாதன், மாவட்ட இணை செயலாளர்கள் மாரிமுத்து, சேதுபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் மாரிமுத்து, டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான ரேஷன்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்