தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி சாவு

தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-02-08 17:21 GMT
கரூர்
கரூர்
கரூரை அடுத்த ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள சடையகவுண்டம் புதூரை சேர்ந்தவர் குமார்(வயது 38). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று செட்டிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் குளிப்பதற்காக  சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோனிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கரூர்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் தாந்தோனிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்