நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-08 17:19 GMT
கரூர்
தோகைமலை
கீரனூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 36). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் உள்ள மரங்களை வெட்டியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மார்க்கண்ட வேல், வடிவேல் மற்றும் அருகிலுள்ள கஞ்சமநாயக்கனூர் பழனியப்பன் ஆகிய 3 பேரும் அங்கு வந்து, நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது எப்படி மரத்தை வெட்டலாம் என கூறி  அவரை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த விஜயராகவன் இதுகுறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்