9 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

9 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

Update: 2022-02-08 17:18 GMT
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் 9 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
 
சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் உள்ள 285 வார்டு உறுப்பினர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பள்ளத்தூர் பேரூராட்சியில் 4 உறுப்பினர்களும், கோட்டையூர் பேரூராட்சியில் ஒரு உறுப்பினரும், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் ஒரு உறுப்பினரும், நெற்குப்பை பேரூராட்சியில் ஒரு உறுப்பினரும், சிங்கம்புணரி பேரூராட்சியில் இரண்டு உறுப்பினர்களும் சேர்த்து மொத்தம் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த 9 வார்டிலும் தேர்தல் நடைபெறவில்லை. 
275 வார்டுகளில் 
இதுபோல கானாடுகாத்தான் பேரூராட்சியில் உள்ள ஒரு வார்டில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரும் தனது மனுவை வாபஸ் பெற்று விட்டார். இதனால் அந்த வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. எனவே சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 285 வார்டு உறுப்பினர்களில் 10 வார்டுகள் தவிர மீதி உள்ள 275 வார்டுகளில் உறுப்பினர்களை தேர்வு செய்ய 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்