தீக்காயம் அடைந்த பெண் சாவு
தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டியை அடுத்த காரைக்குடியைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பொன்னம்மாள்(வயது 50). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி வீட்டில் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ பிடித்தது. பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை பொன்னம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.