கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து இருந்தது.
பொள்ளாச்சி
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் நடந்தது. ஆனைமலை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இருந்து கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில், 322 மூட்டைகளில் முதல் ரகம் கொப்பரை கிலோ ரூ.90 முதல் ரூ.92.25 வரை ஏலம் போனது. 2ம் ரகம் 302 மூட்டைகள் கிலோ ரூ.72 முதல் ரூ.87.50 வரை ஏலம் போனது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கூறியதாவது:- ஏலத்திற்கு மொத்தம் 624 கொப்பரை மூட்டைகள் வந்து இருந்தது. 92 விவசாயிகள், 10 வியாபாரிகள் ஏலத்தில்கலந்து கொண்டனர். கடந்த வாரத்தை விட சராசரியாக கிலோவிற்கு ரூ.2.75 விலை குறைந்து ஏலம் போய் உள்ளது. ஆனால், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் வரத்து 66 முட்டைகள் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.