ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் பறிமுதல்
ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரிகள் தாசில்தார் ரங்கசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் சோதனை நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் சாலையில் சோதனை நடத்தியபோது அந்த வழியாக மினிவாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1,45,850 இருந்தது தெரியவந்தது. வாகனத்தில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியபோது ராஜபாளை யத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகளுக்கு பாமாயில் சப்ளை செய்து வாங்கி வந்த பணம் என்று தெரிவித்தனர். இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை மம்சா புரம் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும் போது, உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.