அரூரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ1 கோடிக்கு பருத்தி ஏலம்
அரூரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
அரூர்:
அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பருத்தி ஏலம் தொடங்கியது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை இங்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற 444 விவசாயிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை விவசாயிகள் எடுத்து வந்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.9,130 முதல் 10,901 வரையிலும், வரலட்சுமி (டி.சி.எச்.) ரகம் ரூ.11,149 முதல் ரூ.12,609 வரை ஏலம் போனது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் ரூ.1 கோடியே 5 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.