பர்கூர் அருகே பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
பர்கூர் அருகே பெண்ணிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள மோட்டரப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சுதா (வயது 32). நேற்று முன்தினம் இவர் கொண்டப்பநாயனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தனது கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபர் திடீரென்று சுதாவின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதையடுத்து சுதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து பர்கூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அருகே ரெட்டியூர் பக்கமுள்ள காவேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் (42) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 பவுன் நகை மீட்கப்பட்டது.