ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது
ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது செய்யப்பட்டார்.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா வெங்கடாசல புரத்தை சேர்ந்தவர் திருமலைராஜன் (வயது 50). இவர் மேட்டமலை கிராமத்தில் பட்டாசு கடை கட்டுவதற்காக கட்டிட வரைபடம் அனுமதி கோரி ஊராட்சி மன்ற அலுவல கத்தில் ஊராட்சி செயலர் கதிரேசனிடம் மனு அளித்துள் ளார். அப்போது மனுவைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு பணம் செலுத்த வேண்டிய ரூ.30 ஆயிரம் அதற்கு ரூ.20 ஆயிரம் ஊராட்சி செயலர் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு திருமலைராஜன் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்திருமலை ராஜனிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை கதிரேசன் கொடுக்க அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து திருமலைராஜன் ரசாயனம் தடவிய பணத்தை கதிரேசனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன், சப்-இன்ஸ் பெக்டர் பாரதிபிரியா ஆகியோர் கதிரேசனை பிடித்து அவரிடம் இருந்த 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும் மேட்டமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
---