திருக்கோவிலூர் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தொழிலாளி மர்ம சாவு கொலையா போலீஸ் விசாரணை

திருக்கோவிலூர் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2022-02-08 16:21 GMT

திருக்கோவிலூர்

தொழிலாளி

திருக்கோவிலூர் அருகே உள்ள ஜாதகம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது 45). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்ணனை காணவில்லை. இந்த நிலையில் மணலூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் விசாரணை

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்ணன் எவ்வாறு இறந்தார்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தால் மணலூர்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்