போடி நகர் போலீஸ் நிலையத்துக்கு பாராட்டு கேடயம்

தமிழகத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வான போடி நகர் போலீஸ் நிலையத்தை பாராட்டி அங்கு பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு கேடயம் வழங்கினார்.;

Update: 2022-02-08 16:06 GMT
தேனி: 

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் சிறந்த 3 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த போலீஸ் நிலையங்களுக்கு முதல்-அமைச்சரால் பாராட்டு கேடயம் வழங்கப்படும். அதன்படி 2020-ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் நிலையமாக போடி நகர் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட அளவில் அனைத்து பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் இந்த போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. 

இதற்காக முதல்-அமைச்சரின் சார்பில், பாராட்டு கேடயத்தை போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமலட்சுமி ஆகியோரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வழங்கி பாராட்டினார். மேலும் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கும் போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்