சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் சங்கு பூக்கள்

பெரும்பாறை பகுதியில் சாலையோரங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2022-02-08 15:38 GMT
பெரும்பாறை:
பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கே.சி.பட்டி போன்ற கீழ்மலைப்பகுதிகளில் விவசாயிகள் பலர் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் வெளியாட்கள் யாரும் செல்லாமல் இருக்கவும், அவரவர் தோட்ட எல்லைக்காகவும், வேலிக்காகவும் சாலையோரம் சங்கு பூ செடிகளை நடவு செய்துள்ளனர். தற்போது இந்த சங்கு பூக்கள் ரோஸ், மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் சாலையோரம் பூத்து குலுங்குகின்றன.
இவை பல்புகளை கொத்தாக தொங்க விட்டது போல காட்சியளிக்கிறது. இதை வாகனங்களில் செல்பவர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.  இந்த பூக்கள் காலையில் மலர்ந்து மாலையில் மடிந்து விடுகிறது.

மேலும் செய்திகள்