கோவையில் போலீஸ் கொடி அணிவகுப்பு

கோவையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

Update: 2022-02-08 15:32 GMT
கோவையில் போலீஸ் கொடி அணிவகுப்பு
கோவை

கோவை மாநகராட்சிக்கு வருகிற 19 -ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது, நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு போடலாம் என்பதை எடுத்துக் கூறும் வகையில்கோவை சிவானந்த காலனி பகுதியில், காவல் துறை சார்பாக, கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

கொடி அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையத்திற்கும் வழங்கப்பட்ட நவீன காவல் ரோந்து வாகனங்களும் பங்கேற்றன. இந்த  அணிவகுப்பு .சிவானந்தா காலனி, பகுதியில் தொடங்கிய இந்த அனிவகுப்பு சங்கனூர், ரத்தினபுரி ஆகிய பகுதிகளின் வழியாகசென்று மீண்டும் சிவானந்தா காலனியில் நிறைவடைந்தது.
-

மேலும் செய்திகள்