ஊட்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி ஆய்வு

ஊட்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-02-08 15:30 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 13 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சியில் 82 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் ரெக்ஸ் மேல்நிலை பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. 

இதற்காக 2 பாதுகாப்பு அறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணுவதற்கு 8 மேஜைகள் போடப்பட்டு, சுற்றிலும் தடுப்பு, கம்பி வலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

 இந்தநிலையில் ஊட்டி நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஆணையாளருமான காந்திராஜ் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வாக்கு எண்ணும் பணிகளை பதிவு செய்ய கேமராக்கள் பொருத்துவது, முகவர்கள் வந்து செல்லும் பகுதி, பாதுகாப்பு அறைகள், பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் செய்திகள்