20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது முதியவர் பலி
20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது முதியவர் பலி
கோவை
கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது65). இவர் அங்குள்ள கல்குவாரியில் காசாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர், இரவில் வேலை முடிந்து ஊழியர்கள் 2 பேரை காரில் அருகில் உள்ள ஊழியர்கள் குடியிருப்புக்குசென்று கொண்டிருந்தார்.
அப்போது குவாரியில் இருந்து சில மீட்டர் தொலைவில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி அங்கிருந்த 20 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் 3 பேரும் சிக்கி கொண்டனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்த சோமசுந்தரம் பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் பலியான சோமசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த சேலம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக் (21), சேலம் கல்லார்காட்டை சேர்ந்த மாணிக்கம் (43) ஆகிய 2 பேரும் மீட்கப்பட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.