திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு மீண்டும் கழுகுகள் வரவேண்டி பிரார்த்தனை
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு மீண்டும் கழுகுகள் வரவேண்டி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு தினந்தோறும் மதியம் 12 மணியளவில் 2 கழுகுகள் வந்து பிரசாதத்தை சாப்பிட்டு செல்வது வழக்கம் இதை பார்க்க ஏராளமானோர் மலைக்கோவிலுக்கு வருவார்கள். கடந்த பல ஆண்டுகளாக பிரசாதம் சாப்பிட கழுகுகள் வருவதில்லை. இந்த நிலையில் கழுகுகள் மீண்டும் வருகை தந்து பிரசாதம் சாப்பிட வேண்டி நேற்று காலை திருக்கழுக்குன்றம் தாழக்கோவிலில் உள்ள ஆமைமண்டபத்தில் வேத மலை குழு மற்றும் அகஸ்தியா கிருபா அன்புசெழியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாழக்கோவிலில் இருந்து பக்தர்கள் 1,008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று மலைக்கோவில் உள்ள வேதகிரீஸ்வரக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் பட்ச் பாறையில் வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றை தெரிவிக்கும் விதமாக 2 கழுகு சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.