தாராபுரம் நகராட்சி 5 மற்றும் 6வது வார்டு இணைப்பு பகுதியில் தான் ஜின்னா மைதானம் உள்ளது. அதன் தொடர்ச்சியில் முகம்மதிய நகரில் கடந்த 15 ஆண்டு காலமாக 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. . இந்த பகுதிக்கு குடிநீர், கழிவுநீர் கால்வாய், காங்கிரீட் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் ெதரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் புதர் மண்டி இருப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் அடிக்கடி புகுந்து அச்சுறுத்தி வருவதாக கூறுகிறார்கள். எனவே நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி நகரின் முக்கிய பகுதியில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனை அறிந்த அரசியல் கட்சியினர் தேர்தல் முடிந்தவுடன் இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.