தாம்பரம் மண்டல அலுவலகம் சார்பில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்
தாம்பரம் மண்டல அலுவலகம் சார்பில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம் காணொலி காட்சி மூலம் 10-ந் தேதி நடக்கிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தாம்பரம் மண்டல அலுவலகம் சார்பில் சந்தாதாரர்கள் மற்றும் ஊழியர்களின் குறைகளை விரைவில் தீர்த்து வைப்பதற்காக “வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்” (நிதி ஆப்கே நிகத்) என்ற பெயரில் காணொலி காட்சி மூலம் வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுவரையில் தங்கள் குறைகளுக்கு தீர்வு கிடைக்காத ஊழியர்கள், தங்களது கோரிக்கை மனுவை tam-grievances@epfindia.gov.in என்ற இணையதளத்துக்கு அனுப்பலாம். காணொலி மூலம் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க http://meet.google.com//zjj-jujh-ufs- என்ற லிங்க்கில் 10-ந் தேதி அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இணையலாம்.
இதே போன்று ஓய்வூதியர்கள் தங்களது மனுவை இணையதளத்தில் பதிவு செய்து இதே லிங்க்கில், அன்றைய தினம் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இணையலாம். மேற்கண்ட தகவல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தாம்பரம் மண்டல கமிஷனர் ஹிமானுசு குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.