வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டனl
வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன
வெள்ளகோவில் நகராட்சிக்கு வருகின்ற 19ந்தேதி நகர்ப்புற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 80 பேர் வார்டு உறுப்பினர் பதவிக்குப்போட்டியிடுகின்றனர். மொத்தம் 42 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கு உண்டான வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் திருப்பூரிலிருந்து வெள்ளகோவிலுக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக தனியறையில் வைக்கப்பட்டது. நேற்று வெள்ளகோவில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 80 வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் செலவினங்கள் குறித்த கையேடுகள் வேட்பாளர்களின் பூத் முகவர்களின் அடையாள அட்டை வழங்கி வேட்பாளர்கள் முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கிக்கூறினர்.