321 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 321 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகள், உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 69 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 419 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று 90 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இறுதியாக அரியலூர் நகராட்சியில் 89 பேர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 108 பேர், 2 பேரூராட்சிகளில் 124 பேர் என மொத்தம் 321 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.