ஆசிரியர் தற்கொலை

சேலத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-07 22:11 GMT
ஆசிரியர் தற்கொலை
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் காளமேக கண்ணன் (வயது 46). இவர் ஆச்சாங்குட்டப்பட்டி அரசுப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்