சேலம் மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 310 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று 291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 82 பேர், சேலம் ஒன்றியத்தில் 74 பேர், ஆத்தூர் பகுதிகளில் 39, நகராட்சி பகுதிகளில் 13 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு சென்னை, நாமக்கல், கரூர், ஈரோடு உள்பட பிற மாவட்டங்களில் இருந்து வந்த 83 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,131 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 5 ஆயிரத்து 406 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.