16 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 16 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-02-07 21:36 GMT
தஞ்சாவூர்;
தஞ்சையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 16 பவுன்  நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வெளியூர் பயணம்
தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் சிவபிரசாத் பாபு (வயது 23). இவர் கடந்த மாதம் 25-ந் தேதி தங்களின் வீட்டை பூட்டி விட்டு தனது தாயாருடன் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று முன்தினம் தஞ்சைக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.
16 பவுன் நகை திருட்டு
வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 சவரன் நெக்லஸ், தங்க செயின் என மொத்தம் 16 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் ரூ.3லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சிவபிரசாத் பாபு தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் சேகரிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை  வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்