காரில் கொண்டு வந்த ரூ.78 ஆயிரம் பறிமுதல்
காரில் கொண்டு வந்த ரூ.78 ஆயிரம் பறிமுதல்;
வாடிப்பட்டி
பரவை பேரூராட்சி பகுதியில் பறக்கும்படை அதிகாரி தாசில்தார் சரவணபெருமாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி, ஏட்டுகள் நாகலிங்கம், மனோரஞ்சிதம் ஆகியோர் திண்டுக்கல்-மதுரை சாலையில் ஊர்மெச்சிக்குளம் பிரிவில் வாகன சோதனை செய்தனர். அப்போது மதுரையை நோக்கி வந்த காரினை மறித்து சோதனை செய்தனர். அந்த காரினை ஜெயந்திபுரத்தை சேர்ந்த இளையராஜா(வயது 45) என்பவர் ஓட்டிவந்தார். காரில் மதுரை தனியார் மருத்துவமனை மருந்து விற்பனை பிரதிநிதி வில்லாபுரத்தை சேர்ந்த ஆதிநாராயணன்(41) என்பவர் வைத்திருந்த பையில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.78,690 பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரி பார்வையிட்டு ஆய்வுசெய்தபின் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.