திருச்சிற்றம்பலம்;
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள அம்மையாண்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி தலைவர் மல்லிகை முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் முன்னிலை வகித்தார். அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் பேராவூரணி ஒன்றிய ஆணையர் தவமணி, மாவட்ட கவுன்சிலர் இலக்கியாநெப்போலியன் மற்றும் அம்மையாண்டி ஊராட்சி உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.