கனரக எந்திரங்களில் டீசல் திருடிய 3 பேர் கைது

பாவூர்சத்திரம் பகுதியில் கனரக எந்திரங்களில் இருந்து டீசல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-07 20:54 GMT
பாவூர்சத்திரம்:
நெல்லை- தென்காசி சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு பொக்லைன் எந்திரம், கிரேன் மற்றும் ரோடு ரோலர் உள்ளிட்ட கனரக எந்திரங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணியில் உசிலம்பட்டியை சேர்ந்த தமிழன் மகன் மணிமுத்து (வயது 20) என்பவர் கனரக எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரும், இவருடைய கூட்டாளிகள் காடுபட்டியைச் சேர்ந்த சின்னசாமி மகன் ரஞ்சித்குமார் (20), வாடிப்பட்டியைச் சேர்ந்த காட்டுராஜா மகன் செல்லப்பாண்டி (25) ஆகியோரும் கனரக மற்றும் பொக்லைன் எந்திரங்களில் டீசலை திருடி சென்று, அவ்வப்போது மதுரை அருகே கொண்டு சென்று விற்று வந்துள்ளனர்.

இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாவூர்சத்திரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் எந்திரங்களில் இருந்து டீசல் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்