வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு

விருதுநகரில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-02-07 20:14 GMT
விருதுநகர், 
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நேற்று விருதுநகர் வந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நின்ற இந்த ஊர்தியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் பகுதிக்கு வந்த ஊர்தியினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில்  ரகுராமன் எம்.எல்.ஏ., ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்