சொக்கர் கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவ விழா
ராஜபாளையம் சொக்கர் கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
ராஜபாளையம்
ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜாவிற்கு பாத்தியப்பட்ட சொக்கர் என்கிற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் மாசி மகம் பிரம்மோற்சவ விழாவில் 7-ம் நாளான 13-ந் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம், 14-ந் தேதியன்று தெப்பத்தேரோட்டம், 15-ந் தேதியன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெறும். 16-ந் தேதியன்று பஞ்சமூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் திருவீதி உலா நடைெபறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராம்கோ குரூப் குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.