ஆலங்குளம் பகுதியில் உழவு பணி தீவிரம்

பருத்தி சாகுபடிக்காக ஆலங்குளம் பகுதியில் தற்போது உழவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2022-02-07 19:54 GMT
ஆலங்குளம்,
பருத்தி சாகுபடிக்காக ஆலங்குளம் பகுதியில் தற்போது உழவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
பருத்தி சாகுபடி 
ஆலங்குளம், கொங்கன்குளம். கரிசல்குளம், கண்மாய் பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, அப்பய நாயக்கர்பட்டி, ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி உப்பு பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, ரெட்டியபட்டி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம். காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, கீழராஜகுலராமன், தொம்ப குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம். 
அதேபோல இந்த ஆண்டு ஆலங்குளம் பகுதியில் மாசி மாதம் பருத்தி சாகுபடி செய்ய உழவு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 
உழவு பணி 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி சாகுபடிக்காக தற்போது உழவு பணிைய தொடங்கி உள்ளோம். 
கடந்த குளிர்கால பருத்தி மகசூல் அதிகமாக இருந்தது. ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10 ஆயிரம் வரை விற்பனை விலை போனது. வழக்கமாக மாசி பட்டம் பருத்தி சாகுபடி செய்வதற்கு பிப்ரவரி 13-ந் தேதிக்கு பின்னர்தான் உழவுப்பணி தொடங்குவது வழக்கம். ஆனால் தற்போது   நல்ல மழை பெய்து கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் உள்ளது. எனவே முன்கூட்டியே உழவு பணியை தொடங்கி விட்டோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்