மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி

மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், அரசு பஸ் ேமாதியதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-02-07 19:45 GMT
வத்திராயிருப்பு, 
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், அரசு பஸ் ேமாதியதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கூலி தொழிலாளிகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர்கள் இசக்கிமுத்து (வயது19), சின்னதம்பி (21). கூலி தொழிலாளிகள். இவர்கள் நேற்று மாலை கிருஷ்ணன் கோவிலில் இருந்து வத்திராயிருப்பிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த அரசு பஸ், சேஷபுரம் விலக்கு அருகே வளைவில் வந்த போது மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. 
2 பேர் பலி 
இதில் சம்பவ இடத்திலேயே இசக்கிமுத்து, சின்னதம்பி ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்