போலீஸ்காரர் திடீர் தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே போலீஸ்காரர் திடீர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-07 19:38 GMT
அருப்புக்கோட்டை, 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் மல்லிசாமி (வயது 35). இவருடைய மனைவி மீனா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  மல்லிசாமி தனது குடும்பத்துடன் பந்தல்குடியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.  இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு மல்லிசாமி  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மல்லிசாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மல்லிசாமி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்