சிவகங்கை கால்பந்து கழகம் சார்பில் 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகள் சிவகங்கையில் நடைபெற்றது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. 12 வயதுக்கு உட்பட்ட இறுதிப் போட்டியில் இளையான்குடி அணியினர் மதுரை அணியுடன் மோதினர். இதில் இளையான்குடி அணி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது. 14 வயது உட்பட்டோருக்கான போட்டியில் மதுரை அணியும் திருமங்கலம் அணியும் மோதின. இதில் டை பிரேக்கர் முறையில் திருமங்கலம் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை கால்பந்து கழக செயலாளர் சிக்கந்தர், கால்பந்து பயிற்சியாளர் கார்த்திக் மற்றும் சங்கர், அற்புதம் ஆகியோர் செய்திருந்தார்கள்.