சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி;

Update: 2022-02-07 19:12 GMT
சிவகங்கை,

திருப்புவனம் அருகேயுள்ளது பாப்பாங்குளம் கிராமம். இங்குள்ள அரசு பள்ளி மைதானத்தை சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதே ஊரை சேர்ந்த கண்ணன் என்கிற விவசாயி பல முறை புகார் மனு அளித்தும் வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
 இந்நிலையில் கண்ணன் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்தார். அலுவலக வாயிலிலேயே அவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றியதுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும் செய்திகள்