கொல்லங்கோடு நகராட்சியில் தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
கொல்லங்கோடு நகராட்சியில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு புறக்கணிப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு நகராட்சியில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு புறக்கணிப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்லங்கோடு நகராட்சி
குமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு நகராட்சி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக அருகில் உள்ள ஏழுதேசம் பேரூராட்சி இணைக்கப்பட்டது.
இந்தநிலையில் கொல்லங்கோடு நகராட்சி முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. 33 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே 5 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலை புறக்கணிப்பதாக...
இந்தநிலையில் கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட சில இடங்களில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது, நித்திரவிளை பகுதியில் மேற்கு கடற்கரை சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு வடிகால் ஓடை அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.
இதுசம்பந்தமாக ஊர் மக்கள் பல வருடங்களாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டு கொள்ளாத அதிகாரிகளை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.