ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்த பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்த பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே வெளி மாநிலத்திற்கு ரெயில் மூலம் கடத்த பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரோந்து பணி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன் பட்டி ரெயில்நிலையத்தில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில் மூலம் சிலர் ரேஷன் அரிசியை கடத்தி வருகின்றனர். இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார், உணவுத்துறை துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது ரெயில் நிலையங்களில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது ரெயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக மர்ம நபர்கள் சிலர் சிறுசிறு மூட்டைகளில் பிளாட்பாரத்தின் அருகே உள்ள முட்புதரின் ஓரத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். மேலும்ெ ரயில் மூலம் கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து வருவாய்த் துறையினரும், ெரயில்வே போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.