குடியாத்தம் அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை

குடியாத்தம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-02-07 18:20 GMT
குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சேத்துவண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி மணிகண்டன் (வயது 32), இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. துளசி மணிகண்டன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த துளசி மணிகண்டன் கடந்த 5-ந் தேதி காலை வீட்டில் தன் மீது மண்எணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது  அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்