கலசபாக்கம் ஆற்று திருவிழாவில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர்
கலசபாக்கம் ஆற்று திருவிழாவில் அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
கலசபாக்கம்
கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் ரதசப்தமி என்ற ஆற்று விழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாக ஆற்று திருவிழா நடக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் செய்யாற்றில் தெற்கு பகுதியில் உள்ள தென்பள்ளிப்பட்டு கிராமத்தின் வழியாக வந்தார். கலசபாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் வடக்கு பகுதியில் செய்யாற்றுக்கு வந்தார். பின்னர் ஒரே நேரத்தில் எதிரெதிரே அருணாசலேஸ்வரரும், திருமாமுடீஸ்வரரும் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.