கலவையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வந்த ரூ.88,650 பறிமுதல்

கலவையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வந்த ரூ.88,650 பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-07 18:19 GMT
கலவை

கலவை-திமிரி, வாழைப்பந்தல், ஆற்காடு சாலையில் ேதர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். வாக்காளருக்கு பணம், வேட்டி-சேலை, பரிசு பொருட்களை வழங்குவதற்காக யாரேனும் வாகனங்களில் மேற்கண்டவற்றை எடுத்துச் செல்கிறார்களா? எனச் சோதனை செய்தனர். 

அப்போது அந்த வழியாக ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் காஞ்சீபுரத்தில் இருந்து காரில் ஆரணியை நோக்கி வந்தார். அவரின் காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.88 ஆயிரத்து 650-யை பறிமுதல் செய்து, கலவை தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்