திருப்பத்தூர் தாலுகாவில் விளையாட்டு அரங்கம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் தாலுகாவில் விளையாட்டு அரங்கம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகாவில் 7 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் தடகள ஓடுதளம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கோகோ மைதானம், அலுவலக அறை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
அதற்கு ஏற்றவாறு இடங்கள் உள்ளனவா? என்பது குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆதியூர் ஊராட்சி பனந்தோப்பு மற்றும் விநாயகபுரம் ஆகிய இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவபிரகாசம், கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.