30 ஆயிரத்து 774 எக்டேர் உளுந்து பயிறு சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 774 எக்டேர் உளுந்து, பயிறு சாகுபடி நடைபெற்றுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 774 எக்டேர் உளுந்து, பயிறு சாகுபடி நடைபெற்றுள்ளது.
அறுவடை பணிகள்
திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடி என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உளுந்து, பயிறு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
உளுந்து, பயிறு சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 668 எக்டேர் பரப்பளவில் நெல் தரிசிலும், 8 ஆயிரத்து 382 வரப்பு உளுந்து என மொத்தம் 13 ஆயிரத்து 50 எக்டேர் பரப்பளவில் உளுந்து சாகுபடி நடைபெற்றுள்ளது. இதேபோல் 17 ஆயிரத்து 724 எக்டேர் பரப்பளவில் பச்சை பயிறு சாகுபடி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 774 எக்டேர் பரப்பளவில் உளுந்து, பயிறு சாகுபடி நடைபெற்றுள்ளது.