விஷம் குடித்து தொழிலாளி சாவு
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மோட்டாண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது52).விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மாரிமுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாரிமுத்து வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.