அழுகிய நிலையில் பாறையில் கிடந்த பெண் பிணம் அடையாளம் தெரிந்தது
அழுகிய நிலையில் பாறையில் கிடந்த பெண் பிணம் அடையாளம் தெரிந்தது
சேத்துப்பட்டு
சேத்துப்பட்ைட அடுத்த ஜெகநாதபுரம் அருகே பூம்பாறை மலையில் பாறை மீது அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது.
சேத்துப்பட்டு போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
பிணமாக கிடந்தவர் சேத்துப்பட்டை அடுத்த விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கவிதா (வயது 38) என்று தெரிய வந்தது. கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்தனர்.
கவிதா தனது அண்ணன் சிவா வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். கடந்த மாதம் திடீரென வீட்டில் இருந்து வெளியில் சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை.
பூம்பாறை மலை பகுதியில் ஆடு மேய்த்தவர்கள், பாறையில் பிணம் கிடப்பதைப் பார்த்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் அடையாளம் காணப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.