ஆனைக்கட்டி அருகே மயங்கி விழுந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
ஆனைக்கட்டி அருகே மயங்கி விழுந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
துடியலூர்
ஆனைக்கட்டி அருகே மயங்கி விழுந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
மயங்கி விழுந்தது
கோவையை அடுத்த ஆனைக்கட்டி பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவை, உணவு, குடிநீர் தேடி தடாகம், வரப் பாளையம் நஞ்சுண்டபுரம், பன்னிமடை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
மேலும் மனித- விலங்கு மோதல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கோவையை அடுத்த பெரிய தடாகம் அனுவாவி சுப்ரமணியசாமி கோவில் வனப்பகுதியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று வெளியே வந்தது.
அந்த யானை ஆனந்து என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திடீரென்று மயங்கி விழுந்தது. அதனால் எழுந்திருக்க முடிய வில்லை.
யானை சாவு
இது குறித்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர், கால்நடை டாக்டர் அசோகன், வன அலுவலர் அருண் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், மயங்கி கிடந்த யானைக்கு முதலுதவி அளிக்கும் வகையில் 30 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றினர்.
மேலும் அந்த யானையின் உடலில் என்னென்ன பாதிப்புகள் உள்ளன என்று பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் யானை தொடர்ந்து கவலைக் கிடமாக இருந்தது. இதையடுத்து சிகிச்சை அளிக்காமல் அந்த காட்டு யானை பரிதாபமாக இறந்தது.