கீரணத்தம் பகுதியில் தந்தையை கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்கணவர் நெஞ்சுவலியால் இறந்ததாக நாடகமாடிய மனைவியும் சிக்கினார்
கீரணத்தம் பகுதியில் தந்தையை கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார் கணவர் நெஞ்சுவலியால் இறந்ததாக நாடகமாடிய மனைவியும் சிக்கினார்
சரவணம்பட்டி
கீரணத்தம் பகுதியில் தந்தையை கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். கணவர் நெஞ்சுவலியால் இறந்ததாக நாடகமாடிய மனைவியும் சிக்கினார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தனியார் நிறுவன ஊழியர்
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சி புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ஜானகி.
இவர்களது மகன் சுபாஷ் (25). தனியார் நிறுவன ஊழியர்.
பழனிசாமி அவர் குடும்ப செலவுக்காக பலரிடம் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கியதாகவும், அதை அவர்க ளால் திரும்ப செலுத்த முடிய வில்லை என்றும் தெரிகிறது.
இதற்கிடையே பழனிசாமி, மது குடித்து விட்டு தனது மகன் மற்றும் மனைவியிடம் கடன் தொகையை நீங்கள்தான் கட்ட வேண்டும் என்று கூறி தகராறு செய்து வந்துள்ளார்.
கழுத்தை நெரித்தார்
இந்நிலையில் பழனிசாமி மது குடித்து உள்ளார். அது போல் சுபாசும் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சுபாஷ் தந்தை என்றும் பாராமல் பழனிசாமியின் கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதனால் தலை மற்றும் காலில் அடிபட்டதால் பழனிசாமி மயங்கி விழுந்தார். இதையடுத்து சுபாஷ் தனது தாயுடன் அருகில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்று தூங்கி விட்டார். பின்னர் அவர் தனது தாயுடன் வீட்டிற்கு வந்தார்.
விசாரணை
அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் பழனிசாமி கிடந்தார். அதை பார்த்த ஜானகியும், சுபாசும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் பழனிசாமிக்கு நெஞ்சுவலி என்று கூறி 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
அதன் பேரில் அவர்கள் வந்து பார்த்த போது பழனிசாமி இறந்து விட்டார். இது குறித்த தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிசாமியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாடகமாடினர்
இதையடுத்து பழனிசாமி இறந்தது குறித்து அவருடைய மனைவி மற்றும் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு பழனிசாமி இறந்து விட்டதாக ஜானகி கூறி உள்ளார். ஆனால் அவர்களது வீடு தண்ணீரால் சுத்தப்படுத்தப்பட்டு துடைக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.
மேலும் பழனிசாமியின் கால் மற்றும் தலையில் காயங்கள் இருந்தன.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சுபாஷ் தனது தந்தை பழனிசாமியுடன் தகராறு செய்து கழுத்தை நெரித்து தள்ளி விட்டுள்ளார்.
இதில் கீழே விழுந்த போது தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்ததும்,
அதை மறைக்க வீட்டில் படிந்த ரத்தக்கரைைய தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு பழனிசாமி நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக கூறி ஜானகி நாடமாடியதும் தெரிய வந்தது.
மகன் மனைவி கைது
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கொலை செய்த மகன் சுபாஷ், நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவி ஜானகி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.