சினிமா பாடல் பாடி அசத்திய போலீஸ் ஐஜி எஸ்பி
சினிமா பாடல் பாடி அசத்திய போலீஸ் ஐஜி எஸ்பி;
கோவை
கோவை மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி நிறைவு நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது.
இதில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகரும், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினமும் கலந்து கொண்டனர்.
இதையொட்டி அங்கு இசைக்கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.
அப்போது திடீரென மேடைக்கு வந்த ஐ.ஜி. சுதாகரும், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினமும் மைக்கை வாங்கி நடிகர் ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர் பாரத் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற 'என்னம்மா கண்ணு சவுக்கியமா' என்ற பாடலை ராகத்துடன் பாடி அசத்தினர்.
அவர்கள் போட்டி போட்டு பாடியதை அரங்கில் இருந்த போலீசார் கைதட்டி பாராட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.