நாம் தமிழர் கட்சியினர் திடீர் போராட்டம்
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் திடீர் போராட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி 20-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோபி என்ற மாடசாமி வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். நேற்று காலையில் அவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் ராஜசேகர் மற்றும் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையில் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தி.மு.க.வினர் மிரட்டி வாபஸ் பெற வைத்து இருப்பதாக கூறி திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து இதனை வலியுறுத்தி மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீயிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.